search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. எம்.பி"

    ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். #BJPMLA #HarishChandraMeena #Congress
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை மந்திரி சுரேந்திர கோயல் மற்றும் நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினர்.

    இந்தநிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். 
    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    ×